
சென்னையில் தொழிலதிபர் லாட்டரி கிங் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அவருடைய மருமகன் மற்றும் விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கிட்டத்தட்ட 3 நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது தொழிலதிபர் மார்ட்டின் சொந்தமான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டவை என என்பது குறித்து அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதன்படி சோதனையின் மூலம் 12.41 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 6.42 கோடி முடக்கப்பட்டுள்ளது.