தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே சென்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில் ICT Labs செயல்பாட்டில் உள்ளது.

ஏன் ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி தனி பாடமாக அமைக்கப்படவில்லை. இவை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறார் என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் கடந்த 3 வருடங்களில் மத்திய அரசு 1050 கோடி நிதி வழங்கிய நிலையில்அந்த நிதியை என்ன செய்தீர்கள் என்பது குறித்து கண்டிப்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்ல வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ,