குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்த உடன், பயனாளிகளின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதில், “மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்!, இன்று முதல் மாதம்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை கிடைக்கும். உங்களில் ஒருவன் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.