
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் முக்கியமான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தனது மோசமான ஃபார்மை தொடர்ந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 237 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய எல்எஸ்ஜி, தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், பெரிய அழுத்தத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் நான்காவது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பந்த், 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) May 4, 2025
இந்நிலையில் அஸ்மத்துல்லா வீசிய பந்தை ரிஷப் பண்ட் அடித்தபோது பேட்டையும் சேர்த்து பறக்க விட்டார். பந்தை விட பேட் உயரமாக பறந்தது. அவர் அடித்த பந்தை ஷஷாங்க் சிங் கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கிவிட்டார். அப்போது சஞ்சிவ் கோயங்கா வாயில் ஏதோ முணுமுணுப்பது போல் இருந்தது. அவரது முகத்தில் ஏற்பட்ட கோபமும் ரிஷப் பேட்டை பறக்கவிட்ட வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இது பற்றி ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.