
ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும் ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பல தொழில்களில் கொடி கட்டி பறந்த இவரின் சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி 4.5 பில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 37,583 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது 2024 ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.