அயோத்தியாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பும் சில மாநிலங்களில் முழு நாள் விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷ், புதுச்சேரி, உத்தர பிரதேஷ், சண்டிகர், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திரிபுரா, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.