நாளை அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட கோயில் என்பதால் இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. கூடுதலாக காலிஸ்தான் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதிக கவனத்துடன் செயல்படுகிறது மத்திய அரசு. நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ராமர் கோயிலில் பொது மக்கள் ஜன.23இல் இருந்து தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். மேலும், “பக்தர்களால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயிலில் தரிசன நேரத்தை இரவிலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான எண்ணிக்கையில் வரும் பக்தர்களை சமாளிக்க முடியும்” என்றார்.