
சென்னை கண்ணகி நகரில் விழுதுகள் சேவை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதன் பிறகு எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிச்சேரி மழலையர் வகுப்புகளை பார்வையிட்டார். அவர் கூறியதாவது நாடாளுமன்ற கூட்டத்துறையில் திமுக எம்பிக்கள் எதை பேச வேண்டும் என நீண்ட விவாதங்களுக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதையே அவர்கள் பேசுவார்கள்.
அப்போது அதானி திமுக உறவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் கூறியதாவது, அதானி திமுக உறவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பேசிவிட்டார். அதற்குப் பிறகு அதில் பேச எதுவும் கிடையாது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என பேசினார். அவரது பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.