பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சாம்புவாங்கே சிபுகே பகுதியில் அமைந்துள்ள கவுக் மேங்க்ரூவ் பகுதியில் ஒரு பூங்கா அமைந்துள்ளது. இங்கு வந்த ஒரு 29 வயது வாலிபர் ஒரு பெரிய முதலையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த முதலை வாலிபரின் தலையைப் பிடித்து சென்றது. அந்த வாலிபர் முதலையிடமிருந்து தன்னை மீட்க  முயன்ற போதிலும் அவரால் முடியவில்லை.

 

உடனடியாக பூங்கா ஊழியர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் அந்த இளைஞரை முதலையின் பிடியிலிருந்து மீட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.