
தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்கே சுதீஷ் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக வாக்குறுதி கொடுத்தது உண்மை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை, நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம். ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்ததாலேயே அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தோம். அதிமுக அளித்த வாக்குறுதியால் தான் 2024 மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
ராஜ்யசபா சீட்டை பெறுவதற்கான தகுதி தேமுதிகவுக்கு உள்ளது. ஜனவரி 9-ல் கடலூர் மாநாட்டில் கூட்டணி முடிவை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.
மேலும் ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் தேமுதிகவுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் தற்போது எல்.கே. சுதீஷ் இவ்வாறாக கூறியுள்ளார். இதன் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.