இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இன்று ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. இந்த போட்டி இன்று தொடங்கும் நிலையில் மே 25ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது. இதுவரையில் நடந்துள்ள ஐபிஎல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின் மூலம் விராட் கோலி ஒரு முத்தான சாதனையை படைக்க இருக்கிறார்.

அதாவது இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் வரலாற்றில் 4 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களைக் கடந்த முதல்வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். முன்னதாக சிஎஸ்கே, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக விராட் கோலி ஆயிரம் ரன்கள் குவித்திருந்தார். தற்போது கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 38 ரன்கள் எடுத்தால் ஆயிரம் ரன்கள் கடந்து விடுவார். மேலும் இதன்மூலம் ஆயிரம் நன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற உள்ளார்.