இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் பெரும் சலசலப்பு நிலவியது. அதாவது இன்று நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி நீல நிற டி-ஷர்ட் அணிந்து வந்த போது அவர் தன்னை பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவும் பாஜக எம்பிகள் தன்னை தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். அதே சமயத்தில் பாஜக கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஒருவரை தள்ளிவிட்டதில் அவர் தன் மீது விழுந்ததால் தன்னுடைய மண்டை உடைந்தது என்று கூறியுள்ளார். ‌ இதேபோன்று மற்றொரு பாஜக எம்பி மருத்துவமனையில் காயத்தின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.‌இதன் காரணமாக இன்று நாடாளுமன்றத்தில் பரபரப்பு நிலவிய நிலையில் தற்போது பெண் எம்பி ஒருவர் ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.

அதாவது நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பாஜக பெண் எம்பி பாங்க்னோன் கென்யாக். இவர் போராட்டத்தின்போது ராகுல் காந்தி தன் அருகில் நெருங்கி வந்து கத்தியதால் தனக்கு அசோகர்யமாக இருந்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவை தலைவருக்கு புகார் கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். அதாவது போராட்டத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளே நுழைந்த நிலையில் ராகுல் காந்தி தன் அருகில் வந்து கத்தினார். நான் ஒரு பெண் என்பதால் ராகுல் என அருகில் நின்றது எனக்கு அசோகரியத்தை ஏற்படுத்தியது என்று தன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி மீது பெண் எம்பி ஒருவர் இப்படி பரபரப்பு குற்ற சாட்டினை கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.