கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா உக்கிரன் இடையே போர் நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகள் அந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வடகொரியா தங்களது ராணுவத்தை அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியானது.

ரஷ்யாவுக்கு உதவுவதற்காக சுமார் 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மூவாயிரம் வடகொரிய வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தென் கொரியர் எம்பி கூறினார் உக்கரைன் அதிபர் லெஜென்சி கூறியதாவது, வருகிற நாட்களில் வடகொரியா ராணுவம் மொத்தமும் ரஷ்யா உடன் இணைந்து கொள்ளும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது போர் மண்டலங்களின் வடகொரியா ராணுவத்தை ரஷ்ய பயன்படுத்தும் என உக்ரைன் உளவுத்துறை கணித்தது. ரஷ்யாவின் வெளிப்படையான விரிவாக்க நடவடிக்கை இது. வடகொரிய வீரர்கள் எங்கு அனுப்பப்படலாம் என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தெரியவில்லை. வடகொரியா ராணுவத்தினர் இந்த போரில் இணைவது சுமார் 3 ஆண்டு கால போரை தூண்டிவிட்டு இந்தோ பசுபிக் பிராந்தியம் வரை புவிசார் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.