நாட்டில் உள்ள பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதியானது. இதனால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதோடு முன்கூட்டியே முன்பதிவும் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு உள்ளூர் ரயில்களும் இயக்கப்படும் நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரயில்களில் வழக்கமாக கூட்ட நெரிசல்கள் என்பது அதிகமாகவே காணப்படும்.

அதே நேரத்தில் சிலர்  ரயில்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வார்கள். சென்னையில் கூட கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று அட்ராசிட்டி செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. அதோடு சிலர் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு சாகச பயணம் செய்து ரீல்ஸ் வீடியோவுக்காக உயிரை பணயம் வைக்கிறார்கள். இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் ஈடுபடுபவர்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இது ரயில்வே சட்ட பிரிவின் படி குற்றமாகும். எனவே இனி இதுபோன்றுஆபத்தான பயணம் செய்பவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்று ஆபத்தான பயணங்களில் ஈடுபடுபவர்களை கவனிக்க ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.