
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் ரயிலில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளுக்கு தற்போது தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவிற்கு வாராந்திர அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் அந்த ரயிலின் மொத்த பயண நேரம் 24 மணி நேரமாக இருப்பதால் அதனை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலான மதுரை மற்றும் காச்சிகுடா ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கச்சிகுடா – மதுரை வாராந்திர தயிர் சேவை சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட ரயில் சேவை கச்சிகுடாவிலிருந்து ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி மதுரைக்கு வந்து சேர்ந்த பிறகு மதுரையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு கட்சிகுடா செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.