ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று முதல் பிப்ரவரி 19 வரை விண்ணப்பிக்கலாம். சென்னையில் மட்டும் 148 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ, எஞ்சினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது: 18 – 30.