
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்களில் பெண்ணின் உடல் உறுப்புகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் 37 வயது பெண் ஒருவரை கொலை செய்து அவரின் உடல் உறுப்புகளை இரண்டு ரயில் பெட்டிகளில் போட்டுச் சென்ற கமலேஷ் படேல் என்ற 60 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் தன்னுடைய கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று அது முடியாததால் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணின் கால்கள் மற்றும் கைகள் உத்தரகாண்டிலும் மீதமுள்ளவை இந்த இந்தூரிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.