
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். ரயிலின் ஏசி பெட்டிக்குள் பயணிகள் தூங்கி கொண்டிருந்தபோது ஒரு நபர் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் பயணிகள் தூங்கிய பிறகு நைசாக லேப்டாப் செல்போன் ஆகியவற்றை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து ஒடிசாவைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.