
பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கும், சவுகரியமான பயணத்திற்கும் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இந்த ரயிலில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அந்தவகையில் ரயிலில் உடனடி டிக்கெட் மூலம் பயணிக்கும் பொதுவகுப்பு (ஜெனரல்) பெட்டிகள் முதலிலும், கடைசியிலும் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா?
ஸ்லீப்பர், ஏசி பெட்டிகளை விட இவற்றில் கூட்டம் அதிகமிருக்கும். ரயிலின் நடுப்பகுதியில் இப்பெட்டிகளைச் சேர்த்தால், அதிக எடையினால் சமநிலை இருக்காது. ஏறும் போதும் இறங்கும் போதும் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே முதலிலும் கடைசியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.