யூட்யூபரும் பயண வலைப்பதிவாளருமான விஷால் சர்மா, ஹேம்குண்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14609) ரயிலில் பயணம் செய்தபோது, தண்ணீர், காபி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை எதிர்த்து புகார் அளித்ததற்காக பாண்ட்ரி ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

3வது தர  பயணத் தொகுப்பில் பயணம் செய்த விஷால் சர்மா, தண்ணீர், காபி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை எதிர்த்து ரயில்வே செயலியில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அதிகாரிகள் ஏற்கவும் செய்திருந்தனர்.

இதனையடுத்து இரவு நேரத்தில் பாண்ட்ரி ஊழியர்கள் விஷால் சர்மாவை படுக்கையில் இருந்து கீழே இழுத்து தாக்கியுள்ளனர். சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில், மேலாடையின்றி இரத்தம் சிந்திய நிலையில் காணப்பட்ட விஷால், “பயணிகள் பாதுகாப்பு எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து, IRCTC , “மிக விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளது.