இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.  ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகளை தெரிந்து கொள்ள ஐ ஆர் சி டி சி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் charts/vacancy என்ற தேர்வை கிளிக் செய்து பயண விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு Get train chart now என்பதை தேர்ந்தெடுத்தால் காலி இருக்கைகள் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அதனைப் போலவே மொபைல் செயலியில் chart vacancy என்ற தேர்வை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.