இந்தியாவில் ஏராளமான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இந்நிலையில் ரயிலில் முன்பதிவு செய்து பயணிகள் செல்லும்போது அந்த பெட்டிகளில் சில நேரங்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி விடுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் திடீரென முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டம் கூட்டமாக ஏறிய நிலையில் கழிவறை முன்பாகவும் வாசல் படிகளிலும் அவர்கள் நிற்பதால் முன்பதிவு செய்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இது தொடர்பாக ராய் என்ற பயணி வீடியோ வெளியிட்டார்.‌ அவர் திடீரென ஏசி பெட்டிக்குள் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி அமர்ந்துள்ளனர். இது தொடர்பாக ராய் உட்பட முன்பதிவு செய்த பயணிகள் புகார் கொடுத்து 45 நிமிடங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால் அவர் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்கள். பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டி பாட்னா அருகே முன்பதிவு செய்யப்படாத பெட்டி போன்று இருக்கிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளின் கவலையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். சிறந்த உதவியை உங்களுக்கு வழங்குவதை உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளது. மேலும் எந்த விசாரணையும் இன்றி  தன்னுடைய புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் ராய் வேதனை தெரிவித்துள்ளார்.