ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனகபள்ளி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே, இந்த மர்ம கொலை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 35 முதல் 40 வயதுடைய பெண்ணின் உடலின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்டு, படுக்கை விரிப்பில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெண்ணின் உடலின் மற்றொரு பாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததா, இல்லை ஏதேனும் பெரிய குற்றச்செயலோடு தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.