தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் அருந்ததி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் தான் நடித்த பல திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்த நிலையில் தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்த நிலையில் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து மிஸ் செட்டி மிஸ்டர் பொலிசெட்டி திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்.

தற்போது காதி என்ற திரைப்படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தை கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். இது நடிகை அனுஷ்காவின் 50-வது படமாக இருக்கும் நிலையில் பான் இந்தியா மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் தற்போது படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகை அனுஷ்கா சுருட்டு பிடித்து ரத்த கோரையுடன் இருக்கும் பயங்கரமான காட்சிகள் இதில் இடம் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.