
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஐயப்பன் என்ற மாணவன் புல்லட் பைக் ஓட்டியதற்காக 3 பேர் அவருடைய கைகளை வெட்டினர். அதாவது தாழ்ந்த ஜாதியை சேர்ந்த நீ எல்லாம் எப்படி புல்லட் பைக் ஓட்டலாம் என்று கூறி அந்த மாணவனின் கைகளை வெட்டிய நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் கூட ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திரைத்துறையில் இருந்தால் கூட சமூக செயற்பாட்டாளராக ரஞ்சித் தலித் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் பற்றி குரல் கொடுத்துள்ளார். தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன.?அந்த இளைஞனின் கைகள் வெட்டப்பட்ட கடும் துயரத்தை கடந்து சென்றுள்ளார் சங் பரிவார் ஸ்டாலின்.
ரஞ்சித் குரல் கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக உள்ளிட்ட இயக்கங்கள் குரல் கொடுக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு பேராபத்து. தலித்துகளின் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியில் அமர்ந்து விட்டு அவர்களுக்கு எதிராகவே காவல்துறையை வைத்து பொய் முடிச்சுகளை போடும் இந்த அவல ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்று பதிவிட்டுள்ளார். அதோடு திருமாவளவன் பேசிய ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அதாவது நீங்கள் யாருடைய வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்து சட்டசபைக்கு சென்றீர்களோ அவர்களுக்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக இந்த ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று திருமாவளவன் முன்பு பேசிய வீடியோவை இணைத்து முன்பே கணித்தார் திருமா என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,
தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்நாடு முதல்வரின் பதில் என்ன?
நேற்று முன்தினம் சிவகங்கையில் “நீயெல்லாம் புல்லட் ஓட்டமா?” என சாதி வெறியர்களால் அய்யாச்சாமி என்ற இளைஞனின் கைகள் வெட்டப்பட்ட கடுந்துயரத்தை கடந்து சென்றுள்ளார் சங்பரிவார் ஸ்டாலின்!
திரைத்துறையில்… pic.twitter.com/7p5JsivT9q
— DJayakumar (@djayakumaroffcl) February 15, 2025