
தமிழ் சின்னத்திரையில் ஒருகாலக்கட்டத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக வளம் வந்து ரசிகர்களும் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர பெப்சி உமா. ஹீரோயின்களுக்கு நிகராக அந்த காலத்தில் இவருக்கு ஒரு நல்ல புகழ் இருந்தது. இவர் 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் என்றே சொல்லலாம். இப்படி சின்னத்திரையில் பிரபலமாக இருந்தவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. அதாவது ரஜினியின் முத்து படத்தில் பெப்சி உமாவை ஹீரோயினாக நடிக்க வைக்க ரஜினி கேட்டுள்ளார்.
ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டாராம். அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு மீனாவுக்கு சென்றுள்ளது. இரண்டாவது முறையும் ரஜினி வேறொரு படத்திற்கு கூப்பிட்டுள்ளார். ஆனால் முடியாது என்று கூறியுள்ளார் பெப்சி உமா. மேலும் ஹிந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். அதையும் மறுத்துவிட்டாராம். இதற்கு காரணம் என்னவென்றால் சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.