பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக  மாளவிகா நடித்து வருகிறார். மோகனன் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். பா.ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில்  ‘தங்கலான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.