தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருவதோடு ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் சமந்தா குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடிய நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிகை ஸ்ரீலீலா குத்துப்பாடலுக்கு நடனமாட இருக்கிறார். இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நாளை படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகிறது. அதன்படி நாளை மாலை 6.03 மணிக்கு புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகிறது. மேலும் இதனை முன்னிட்டு நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரை அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.