தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இவர் இயக்கிய அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் பென்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கும் நிலையில் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் அதாவது எல்யூசிவில் இணைந்தது போல் தற்போது பென்ஸ் திரைப்படமும் எல்யூசிவில் இணைந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பென்ஸ் திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்த நிலையில் அது நடிகர் நிவின்பாலியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். ரசிகர்களின் கணிப்பு தற்போது உண்மையாகியுள்ளது. மேலும் நடிகர் நிவின்பாலி படத்தில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் அதனை வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.