
இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் அதனை பார்க்கலாம். 1574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதில் இந்திய வீரர்கள் 366 பேர். வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 81 வீரர்கள் அடிப்படை தொகையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடி 50 லட்சம் ரூபாய் பணத்தை இருப்பு வைத்துள்ளது. சென்னை அணி 55 கோடி, பெங்களூர் அணி 83 கோடி, மும்பை அணி 45 கோடி, ராஜஸ்தானி 41 கோடி இருப்பு வைத்துள்ளது.