
யுபிஎஸ்சி பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி இயக்குனர், துணை மத்திய புலனாய்வு அதிகாரி மற்றும் உதவி நீர்வளவியல் நிபுணர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெண்கள், SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்றவர்கள் 25 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.