பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இந்தியாவின் தலைநகரங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 16  ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டத்தின் முடிவில் புள்ளி பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூர், குஜராத்  ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளனர். இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.  மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும்  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் சிஎஸ்கேவின் நூர் அகமதுவை ஒரு பேட்ஸ்மேன் புரிந்து கொள்வது மிக கடினம் என்று  குல்தீப் யாதவ் கூறினார். அகமது மிகவும் நன்றாக பந்து வீசுகிறார். அனைவரிடமும் கற்றுக் கொள்ள முயற்சிக்கும் ஒருவர். லெக்ர் ஸ்பின் பந்துவீச்சு குறித்து நாங்க பேசினோ.ம் அவருக்கு நல்ல வேகமும் உள்ளது. எனவே ஒரு பேட்ஸ்மேன் அவரை புரிந்து கொள்வது கடினம். குறிப்பாக சென்னையில் விளையாடும்போது அது மிகவும் கடினம். இப்போது எல்லா அணியிலுமே லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய பலத்தை நம்பியும் செயல்படுவது தான் என்னுடைய பணி” என்று கூறியுள்ளார்.