
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் கலைஞராக தனுஷ் இருக்கிறார் என்றால் அதற்கு செல்வராகவன் தான் காரணம், நடிப்பின் மீது ஆர்வம் இல்லாத தனுஷை துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமாக்கினார் செல்வராகவன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என செல்வராகவன் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியவர் தான் செல்வராகவன்.
பிஸியான நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்க வேலை செய்யுறதை யார்கிட்டயும் சொல்லாதீங்க. நீங்க சொல்லுறதால யாரும் சந்தோச பட போறது இல்ல. யார்கிட்டயும் உதவி கேட்காதீங்க. ஒன்றரை அணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க” என்று கூறியுள்ளார்.