
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தின் போது பாஜக மற்றும் திமுக கட்சிகளை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றினார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எச்.ராஜா யார் கட்சி தொடங்கினாலும் அவர்கள் பாஜகவின் பீ டீமா கா செயல்படுகிறார்கள் என்று கேட்டார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது திமுக அரசு கோவில் நிதியை தவறாக பயன்படுத்துகிறது. மத்திய அரசை எப்போது ஒன்றிய அரசு என்று விஜய் கூறினாரோ அப்போதே அவர் உங்களுடன் சேர்ந்து விட்டார். ஒன்றிய அரசு என்று கூறும் விஜய் எப்படி பாஜகவின் பீ டீமாக இருக்க முடியும். முதலில் சீமானை பாஜகவின் பீ டீம் என்றனர். தற்போது விஜயை கூறுகிறார்கள். ஒரு கட்சிக்கு இத்தனை டீம் இருந்தால் கண்டிப்பாக பாஜக தாங்காது என்று கூறினார்.