ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை  வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் வடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவியா மாறன் போட்டி முடிவடைந்ததும் ஹைதராபாத் வீரர்களின் ஓய்வறைக்கு சென்று பேசினார்.

அவர் பேசியதாவது, கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தோம். ஆனால் தற்போது இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்துள்ளோம். நீங்கள் என்னை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். தோல்வி அடைந்ததை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டீர்கள். இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் நம்மை பற்றி அனைவரும் பேசுகிறார்கள். மேலும் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் திறமையின் காரணமாக போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.