பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொள்வதாக அதிமுக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இரு கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கூட்டணி முடிவு தொடர்பாக யாரும் கருத்து கூற வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைமை கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததற்காக பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளிகளிலும் கூட்டணி முடிவு பற்றி யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.