மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 20 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த 21ஆம் தேதி நடந்த நிலையில் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பிறப்புறுப்பில் பிளேடு மற்றும் கற்களை சொறுகியுள்ளனர். இதனால் அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சிக்கிய நிலையில் தற்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதாவது அந்த பெண்ணை யாரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யவில்லையாம். அதாவது அந்த இளம் பெண் அந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து வந்த நிலையில் விருப்பப்பட்ட தான் அவருடன் பீச்சுக்கு சென்றுள்ளார். அப்போது தான் அந்த ஆட்டோ ஓட்டுனர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்பதற்காக அந்த பெண் தன்னுடைய பிறப்புறுப்பில் தானே பிளேடு மற்றும் கற்கள் போன்றவற்றை சொருகி விட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.