தமிழ்நாட்டில் பிரியாணி பிரியர்கள் அதிகம் என்று சொல்லும் அளவிற்கு தற்போது பிரியாணி விற்பனையாகியுள்ளது. பொதுவாக முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, பீஃப் பிரியாணி என்று விதவிதமான பிரியாணிகள் இருக்கிறது. பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது என்று சொல்லும் அளவிற்கு பிரியாணி விற்பனை களை கட்டுகிறது. சைவ பிரியர்களுக்காகவும் காளான் பிரியாணி மற்றும் வெஜ் பிரியாணி போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 10,000 கோடிக்கு பிரியாணி விற்பனை நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது பிரபல பிரியாணி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பிரியாணிகள் கிட்டத்தட்ட 2500 கோடிக்கு சந்தை மதிப்பில் விற்பனையானதாகவும் சிறிய மற்றும் சாலையோர கடைகளில் 7500 கோடிக்கும் பிரியாணி விற்பனையானதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 50 சதவீதம் அளவுக்கு பிரியாணி விற்பனை நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மேலும் பிரியாணி விற்பனை தொடர்பான செய்திகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.