இந்தி வெப் தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் பெங்களூரைச் சேர்ந்த  நடிகை குப்ரா சேட். 40 வயதான இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் மனதில் பட்டதை தைரியமாக பேசும் ஒரு நடிகை என்ற பெயரும் எடுத்தவர். இந்த நிலையில் திருமணம் ஆகாத இவர் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது அந்த பேட்டியில்,” அபார்ஷன் செய்த போது நான் தைரியமானவளா? என்று தோன்றவில்லை. ரொம்ப வீக்காகவே உணர்ந்தேன். எதையோ இழந்தது போல உணர்ந்தேன். வெறுமையாக இருந்தது. நானாக முடிவு எடுத்து செய்தது எனக்கு தைரியத்தை கொடுத்தது.

நானாக சென்று அபார்ஷன் செய்து கொண்டேன். அது பற்றி யாரிடமும் கூறவில்லை. ஒரு முறை என் தோழியிடம் மட்டும் சொன்னேன். இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயத்தை நான் என் தோழியிடம் சொன்னதால் அழத் தொடங்கினேன். எனக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. நானாக முடிவு செய்த கருக்கலைப்பு செய்தபோது நான் இறந்திருந்தால் என்னவாகி இருக்கும். யாருக்கும் தெரியாது யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. இது ஒன்றும் சாதாரண முடிவும் இல்லை. அந்த முடிவு நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இவருடைய கர்ப்பத்திற்கு காரணம் யாராக இருக்கும்? அந்த கருவை கலைக்காமல் வைத்திருந்தால் உங்களுக்கு துணையாக ஒரு உயிர் இருந்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.