
நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்க இருக்கிறார். அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் நிதீஷ்குமாரின் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதால்தான் தற்போது ஆட்சி அமைக்க முடிகிறது. ஒருவேளை இந்த இரு கட்சிகளும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு வழங்கினால் ஆட்சி மாற வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் இருவரும் தங்கள் ஆதரவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கே என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் இந்தியாவின் இறையாண்மை மிக்க அரசு கட்டமைப்பை மோடி திட்டமிட்டு அழித்து வருவதோடு, பாஜகவின் ஆட்சியில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் அழிந்து வருகிறது என்று பதிவிட்டு இருந்தார். அதோடு சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை எதையுமே மோடி விட்டு வைக்கவில்லை எனவும் விமர்சித்திருந்தார். இந்த பதிவை நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இந்த கருத்து முற்றிலும் உண்மை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.