
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி சுமார் 3,31,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை விட, ராகுல் காந்தி இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி முன்னிலையில் இருக்கிறார்.