இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ள நிலையில் மோடியின் 3.0 அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு இடம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டதாகவும் தமிழிசை அல்லது, எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் புதிதாக ஒருவரின் பெயரும் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.