
ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாததால் இது குறித்து கேட்டபோது ஊழியர்கள் மதிய உணவுக்கு சென்று விட்டதாக வாடிக்கையாளருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் மதிய உணவே இடைவேளை என எதுவும் கிடையாது என்று தான் எஸ்பிஐ வங்கி கூறியிருந்தது. இந்த நிலையில் ஊழியர்களும் மொத்தமாக மதிய உணவுக்கு சென்று உள்ளனர் என்றும் அந்த புகைப்படத்தை பகிர்ந்தும் வங்கியை டேக் செய்து வாடிக்கையாளர் பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள எஸ்பிஐ வங்கி, உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிளை வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவை தவறாக பயன்படுத்தப்பட்டால் நீங்கள் பொறுப்பு கூறலாம். சமூக வலைத்தளங்களில் இருந்து இவற்றை நீக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம் என கூறியுள்ளது.