மேஷம் ராசி அன்பர்கள்….
இந்த நாள் அன்னை ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்க்கு என்ன வேண்டுமோ செய்து கொடுக்க பாருங்கள் . அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இருந்தாலும் வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். வீணாசைகள் ஒரு பக்கம் மனதில் தோன்றி கொண்டு தான் இருக்கும். வேலைகளில் மிகவும் கவனமாக செயல்படுங்கள்.
இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடக்கும். சற்று நிதானமாக செயல்படுங்கள். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படும். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைப்பளுவால் உடல் கொஞ்சம் சோர்வடையும். குடும்பத்தில் இறுக்கமான சூழல் காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செயலில் காட்டுவீர்கள்.
இன்று பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நண்பர்கள் அமைவார்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வம் துணையாக இருக்கும். கோவிலுக்கு சென்று வர பாருங்கள். மனதில் நிம்மதி கூடும், இன்று மாணவர்கள் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க முடியும். கல்வியில் ஜெயிக்க முடியும். உயர்கல்வியில் மிகுந்த ஆர்வம் இருக்கும். மாணவர்களுக்கு சின்ன சின்ன மன குழப்பம் இருக்கும். வேறு எந்த பிரச்சினையும் இல்லை.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணியுங்கள். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை ; கிழக்கு
அதிஷ்ட எண் ; இரண்டு மற்றும் ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம் ; சிவப்பு மற்றும் பச்சை நிறம்