மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளை பாஜக நம்பி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பத்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.