
நடிகர் ரஜினிகாந்த், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கியமான உரையை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதால், மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலத்தில் 26/11 மும்பை தாக்குதலின்போல், நாட்டின் நிம்மதிக்கும், நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
இந்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், சிஐஎஸ்எஃப் வீரர்கள் சுமார் 100 பேர், மேற்குவங்கம் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 7 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்கவும், முடிந்தால் அவர்களுடன் சில தூரம் சைக்கிள் ஓட்டி உற்சாகப்படுத்தவும் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், “வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள், ஜெய்ஹிந்த்” என உரையை நிறைவு செய்துள்ளார்.