
திருமணம் செய்வதாகக்கூறி 80 சவரன் தங்கநகைகள், ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக பெண் டாக்டர் தொடர்ந்த வழக்கில் பிரசன்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். பிரசன்னா வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்தானவர்களை குறிவைத்து, கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். பதிவு செய்பவர்கள் பாஸ்போர்ட், ஆதார் ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தால்தான் மோசடிகள் தடுக்கப்படும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.