
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரசோல்பூர் கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடைசி ஓவரின் தந்தை வீசும் போது திடீரென அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. அதாவது நண்பர்களாக இருக்கும் சக்தி என்ற 18 வயது வாலிபருக்கும் விஜேஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் சக்தியை விஜேஸ் கிரிக்கெட் பேட்டால் தலையில் அடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சக்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது தப்பி ஓடிய விஜேஸை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.