திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தின் போது திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராத விதமாக மேடையில் லைட்டுகளுடன் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுடன் கூடிய கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்தது. அந்த மின்விளக்கு கம்பம் மேடையில் பேசிக்கொண்டிருந்த ராசா மீது சாய்ந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக நூலிலையில் அவர் உயிர் தப்பினார்.

 

அதாவது மின் கம்பம் சாயத் தொடங்கியதும் கவனித்த ராசா உடனடியாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவர் நகர்ந்ததும் அது மைக்கின் மீது விழுந்தது. உடனடியாக நிர்வாகிகள் அந்த மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த கூட்டமும் நிறுத்தப்பட்டதோடு ராசா அங்கிருந்து காரில் கிளம்பி சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.