கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் இருந்து ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், வந்த பார்சலில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வேறு. ஏர் ஃப்ரையர் பதிலாக, பெட்டியில் ஒரு ஸ்பானிஷ் பாறை பல்லி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த பெண், அமேசான் நிறுவனத்தின் பேக்கேஜிங் செயல்பாட்டில் ஏற்பட்ட தவறு காரணமாகவே இது நடந்திருக்கும் என குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமேசான் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்து, சோஃபியாவுக்கு பணத்தை திருப்பித் தருவதாகவும், ஏர் ஃப்ரையரை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்தத் தீர்வு தனக்கு திருப்திகரமாக இல்லை எனவும் பல்லிக்கு பதில் விஷ பாம்பு இருந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் என சோஃபியா கேள்வி எழுப்பியுள்ளார்.